0
Item

களஞ்சியம் அகராதி v3.0
(Desktop Application)

Free Download Link: Kalanjiam Dictionary v3.0 (Akshaya)


ஆதரவு தாருங்கள்

அதற்காக தங்களின் விருப்பமாக 32Gb பென் ட்ரைவிலும் பதிந்து தருகிறோம்
இது எங்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும்


YouTube Demo - வை பாருங்கள்:


களஞ்சியம் அகராதியின் சிறப்புகளும், பயன்பாடுகளும்:

தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-தமிழ் என ஆன்ட்ராய்டிலும்(Android), இணையத்திலும்(Internet) அகராதிகள் பல உண்டு. ஆனால், கம்ப்யூட்டரில் உபயோகப்படுத்தும் அகராதியாக e-Pals Dictionary மற்றும் களஞ்சியம் அகராதி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 

களஞ்சியம் அகராதி 3.0 version(பதிப்பு) மேம்படுத்தப்பட்ட இடைமுகம்(interface) மற்றும் தற்போது புதிதாக பயனர் வசதிக்காக செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence-AI) இணைக்கப்பட்டு, 3000+ வார்த்தைகளுக்கு படங்களுடன் பொருள் காணுமாறும் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் என தனித்தனியாக இன்றி அனைத்தும் ஒருங்கிணைந்த வெளிப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சம்.

மேலும், Portable application போல நிரலாக்கம் (programming) செய்யப்பட்டுள்ளதால் அனைத்து இயங்குதளத்திலும்  களஞ்சியம் அகராதியை  பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
விரலியிலும் (Pen  drive ) கூட இதன்  மென்பொருளை (Software) வைத்து கணினியில் install செய்யாமல் பயன்படுத்திக்  கொள்ளலாம்.

  1. இதில் நீங்கள் ‘animate’ என்ற வார்த்தையை தேடும்போது படம் உயிரோட்டத்துடனேயே காட்டப்படும்.

உங்கள் தேடுதலின் முடிவில் கிடைக்கப்பெற்ற விளக்கதில் ஏதேனும் வார்த்தைக்கு விளக்கம் அறிய விரும்பினால் அந்த வார்த்தையின் மீது Mouse-ஐ Double Click செய்வதன் மூலம் தேடுதலினுள் தேடுதல் செய்து கொள்ள முடியும். எந்த ஒரு வார்த்தையின் மீதும் Mouse-ஐ Double Click செய்தால் அதற்கான விளக்கம் காண்பிக்கப்படும்.

 

வலது புறத்தில் உள்ள ஆங்கில விளக்கத்திலும், உதாரணத்திலும்  நாம் Mouse-ஐ கொண்டு செல்லும் போது உங்களது கம்ப்யூட்டரின் Operating System கொண்டுள்ள  text-speech-ஐ பொருத்து ஆண் மற்றும் பெண்  படம் (XP-ஆண், Windows 7-பெண், Windows 10-ஆண், பெண்) தோன்றும். அந்தப் படத்தினை click செய்வதன் மூலம் ஆங்கில வரிகளை படிக்க வைக்க முடியும்.

 

படங்களைப் பெரிதாக்கி பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் இருந்தால், அடுத்தடுத்த படங்களை தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

 

எழுத்துருவின் அளவை (Font size) Mouse click செய்வதன் மூலம் எளிமையாக மாற்றம் செய்து கொள்ளும்படி கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துருவின் அளவை 10 முதல் 20 வரை மாற்றம் செய்து கொள்ள முடியும். இது படிப்பதற்கும், படிப்பவர்க்கும் ஏதுவாக இருக்கும். தேர்ந்தெடுத்துள்ள எழுத்தின் அளவு எப்போதும் நமக்கு புலப்படும்படியே அமைக்கப்பட்டுள்ளது.

 

Auto Speech-ஐ தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் தேடப்படும் வார்த்தை உச்சரிக்கப்படும் .

 

தமிழில் தட்டச்சு செய்வதற்கு நீங்கள் கருவிப்பட்டியில் (Toolbar)  தமிழைத் ()  தேர்வு செய்ய வேண்டும்.  


 உங்களது விசைப்பலகை (Physical keyboard) அல்லது திரை விசைப்பலகை (onscreen keyboard) மூலமாக  நீங்கள் தமிழைத்  type செய்யலாம். 
திரை விசைப்பலகையைத் (Onscreen keyboard)  தேர்தெடுப்பதற்குக் கருவிப்பட்டையில் (Toolbar) கொடுக்கப்படுள்ள சிறிய விசைப்பலகையைக் (keyboard) click செய்யவும். 


எனவே தமிழ் உள்ளீட்டிற்கு (Tamil typing) எந்தவொரு மென்பொருளும் வேண்டியதில்லை.

 

திரை விசைப்பலகை (onscreen keyboard) தோன்றியிருக்கும் நிலையில் நீங்கள்  உங்களது Physical keyboard-ல்  type செய்தால், நீங்கள் type செய்யும் எழுத்துக்கள் திரை விசைப்பலகையில் (onscreen keyboard) வெளிர் பச்சை நிறத்தில் ஒளிர்வதை காணமுடியும்.


தமிழில் ‘அன்னை’ என type செய்ய ‘annai’ என்ற ஆங்கில எழுத்துக்களை அழுத்த வேண்டும்.

 

ஏற்கனவே தேடிய வார்த்தைகளை பார்ப்பதற்கும்(⇓), முந்தைய(←) மற்றும் அடுத்த(→) நிலைக்கு செல்வதற்கும் கருவிப்பட்டையில்(Toolbar) வசதி செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence-AI) open செய்ய ‘ai’ அல்லது ‘artificial intelligence’ என்ற வார்த்தையை தேட வேண்டும். அவ்வாறு தேடும்பொழுது உங்கள் கம்ப்யூட்டரில் Camera இணைக்கப்பட்டிருந்தால் தானாகவே ஒரு வீடியோ விண்டோ உருவாகி உங்கள் முகம் இருக்கும் இடத்தை கண்டுகொள்ளும். பின்பு உங்கள் முகத்தை ஒரு பிரதியும் எடுத்துக்கொடுக்கும். ‘p’ key-ஐ அழுத்துவதன் மூலம் மறுபிரதியும் எடுத்துக்கொள்ளலாம். வீடியோ விண்டோவை மூடுவதற்கு ‘q’ அல்லது ‘escape’ key-ஐ அழுத்த வேண்டும்.

 

ஒரு வடிவத்தை கண்டுணர்ந்து சொல்வதற்கும், வார்த்தையை கண்டுணர்ந்து சொல்வதற்கும் கருவிப்பட்டையில்(Toolbar) உள்ள camera-வை click செய்ய வேண்டும்.
கண்டுணர்ந்து சொல்ல விரும்பும் வடிவத்தை camera முன்பு காண்பிக்க வேண்டும். இப்போது ‘s’ key-ஐ அழுத்தினால் நீங்கள் காட்டும் வடிவம் என்னவென்று கண்டுணர்ந்து சொல்லும்.

அதேபோல் வார்த்தையை கண்டுணர்ந்து சொல்வதற்கு camera முன்பு வார்த்தையை காண்பிக்க வேண்டும். இப்போது ‘r’ key-ஐ அழுத்தினால் நீங்கள் காட்டும் வார்த்தை என்னவென்று கண்டுணர்ந்து சொல்லும்.

 வார்தையின் எழுத்துரு கொஞ்சம் பெரிதாகவும், நேர்த்தியாகவும் இருந்தால் விரைவாய் கண்டுணர்ந்து விடும், இல்லையேல் எழுத்தாய் கண்டுணரும்.


ஒரே நேரத்தில் பலவடிவங்களை கண்டுணர்ந்து சொல்வதற்கு 'capture' 
என்ற வார்த்தையை தேட வேண்டும். அப்போது இரண்டு விண்டோ ஒரே சமயத்தில் open  ஆகும். ஒன்று நாம் வடிவங்களை காண்பிப்பதற்கும் (video window) மற்றொன்று காண்பிக்கப்பட்ட வடிவங்களை  கம்ப்யூட்டர் எவ்வாறு கண்டுணர்ந்து கொள்கிறது  (Computer Vision ) என்பதை அறிவதற்கும்.
Video window-வில்  கண்டுணர்ந்த  வடிவங்களின் பெயர்கள் அந்தந்த வடிவங்களின் மீதே காண்பிக்கப்படும். வீடியோ விண்டோவை மூடுவதற்கு ‘q’ அல்லது ‘escape’ key-ஐ அழுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

சிறப்பு வசதிகள்:
நாம் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து கொண்டிருக்கும்போது அல்லது Word-ல் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏதாவது வார்த்தைக்கு பொருள் வேண்டுமானால் வார்த்தையை double click செய்து keyboard-ல் control key-ஐ அழுத்தி கொண்டு ~key-ஐயும் (Ctrl+~) அழுத்தினால் உடனே வார்த்தைக்கான பொருள் அகராதியில் கிடைக்கும் வகையில் Hotkey வசதி செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் பயனர் நேரத்தை மிச்சப்படுத்தவும், எளிமைக்காகவும் Desktop-லேயே தேடுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வார்த்தையை type செய்து Enter key-ஐ அழுத்தினால் உடனே அகராதி தோன்றி அதில் நீங்கள் தேடிய வார்த்தைக்கான பொருள் காண்பிக்கப்படும்.

 

தொழில்நுட்பம்:

Desktop Programming என்பது Android Programming, Web Programming - விட பல மடங்கு பிரச்சனைகளை  எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், Operating System (OS) பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டியதாகவும் உள்ளது. மேலும், அதனுடன் Developer-க்கான ஊதியமும் மிக முக்கியமான காரணமாக உள்ளது.

Web Programming-கு PHP, C#, Java இவற்றில் ஏதாவது ஒரு மொழியும், அதனுடன் HTML, SQL-ம் போதுமானது. Android Programming-கு Java, SQL-ம் மட்டுமே போதுமானது. அதனைக் கொண்டே பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் Desktop Programming-ல் 100-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளதால் அவற்றை தெரிவு செய்வதிலும், கட்டமைத்திலும் பல சவால்கள் உள்ளன. இதனை C# .net அல்லது Java-ல் எழுதுவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் அதனை பயனரிடம்(User) கொண்டு சேர்ப்பதற்கும், தன்னிச்சை இயக்கத்திலும் இடர்பாடுகள் நிறைய உண்டு.

களஞ்சியம் அகராதி C++ மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் GUI இடைமுகமாக(Interface) wxWidgets-ம், Chromium(CEF)-ம் உள்ளது. மேலும் OpenCv, Boost C++, SQLIte, ... போன்றவையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 தமிழில் ‘அழகு’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் நாம் ‘azaku’ என்று ஒலிப்பியல் (phonetics) முறையில் தட்டச்சு செய்ய வேன்டும்.

 

Free Download Link: Kalanjiam Dictionary v3.0 (Akshaya)

 

  • Prabha 09-02(Feb)-2021 02:45 AM
    தமிழ்-To-தமிழ், English-To-English, தமிழ்-To-English மற்றும் English-To-தமிழ் என்று அனைத்தும் இருப்பதால் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது.