Quick Invoice-ஐ உபயோகிப்பது எப்படி?
YouTube:
ஆன்ட்ராய்டு போன்களில் நிறைய Invoice, Bill Creator (Apps) ஆப்புகள் இருந்தாலும் அவைகளில் ஒரு Bill உருவாக்க சிறிதளவேனும் Inventory சாப்ட்வேர்களின் அனுபவம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
குயிக் இன்வாய்ஸ் (Quick Invoice) ஆன்ட்ராய்டு மென்பொருள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உதவி மற்றும் Inventroy Software-ளில் அனுபவம் இல்லாமலேயே நமக்கு Bill, Invoice, Estimate, Memo and Quotation, ...etc பில்/மெமோ புக்கில் எழுதுவதைப் போன்று இந்த Quick Invoice App மிக மிகக் குறைந்த நேரத்தில் மேற்சொன்ன அனைத்தையும் தயார் செய்ய உதவுகிறது.
தங்களுடைய நிறுவனத்தின் பெயரை ஆங்கிலத்தில் மட்டும் (English) கொடுக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரை முதல் முறையாக சரியாக கொடுக்க வேண்டும். காரணம் ஒருமுறை நிறுவனத்தின் பெயரை கொடுத்துவிட்டால் தங்களால் மாற்ற இயலாது. நிறுவனத்தின் பெயரை மாற்ற விரும்பினால் Email (support@ekalai.net) செய்து Request செய்தால் மட்டுமே மாற்ற முடியும்.
குயிக் இன்வாய்ஸில் . மற்றபடி முகவரி, லோகோ (Logo), கையெலுத்து, கம்பெனியின் நிபந்தனைகள் போன்ற அனைத்து தகவல்களையும் நீங்களாகவே மாற்றிக்கொள்ள முடியும்.
ஒரு ரசீதை தயார் செய்யும் முன்பாக அந்த ரசீது என்ன வகையானது என்பதை இங்கே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது ரசீது தயார் செய்வதற்கு அவசியமானது.
பின்னர், நாம் யாருக்கு ரசீது தயாரிக்க வேண்டுமோ அவர்களின் முகவரியை கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களுக்கு வழங்கும் பொருட்களை வரிசையாக கொடுக்க வேண்டும்.
பொருட்களின் பெயர்களையும், அதற்கேற்ற விலைகளையும் கொடுத்த பின்பு அவைகளுக்கு ஜி.எஸ்.டி (GST) வரி ஏதும் நிர்ணயக்கப்பட்டிருந்தால் வரியின் மதிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் தனித்தனி வரியாக இங்கே பொருள்களுக்கு கொடுக்க முடியாது, அப்படி தனிவரி இருந்தால் அதை இன்னொரு ரசீதாக போட்டுக்கொள்ளவும்.
வரியை நீங்கள் Exclusive Tax அல்லது Inclusive Tax ஆகவும் அமைத்து கொள்ளலாம். கையெழுத்து வேண்டுமென்றால், கையெழுத்து போடும் இடத்தில் பேனாவுடன் இருக்கும் கை படத்தை க்ளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே ஒரு பேப்பரில் கையெழுத்திட்டிருக்கும் படத்தை எடுத்து கையெழுத்தாக இணைத்துக்கொள்ள முடியும். கையெழுத்து ரசீதில் அச்சிடப்படுவது தங்களது விருப்பத்தின் பேரிலேயே இருக்கும்.
தொகையின் மதிப்பு எழுத்துக்களாலும் ரசீதில் ஆட்டோமேட்டிக்காக (Automatic) அச்சிடப்பட்டிருக்கும், இதில் நாணயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
வேண்டுமானால் தங்களது வங்கி விபரங்களையும் இணைத்து கொள்ளலாம். வங்கி கணக்கு விபரங்களும் ரசீதில் அச்சிடப்படுவது தங்களது விருப்பத்தின் பேரிலேயே இருக்கும்.
பின்னர் “Create Receipt” என்கிற பட்டனை அழுத்த வேண்டும்.
பின்னர் ரசீதை தயாரித்து விடலாமா என்பதை உறுதி செய்யவும்.
நீங்கள் உறுதிசெய்த சில வினாடிகளில் தங்களின் ரசீது ஒரு PDF கோப்பாக தயாராக்கப்பட்டு தங்களின் பார்வைக்கு காட்டுவதுடன் மட்டுமல்லாமல்
அதை நீங்கள், WhatsApp, Instagram, Email வசதிகளின் மூலம் தாங்கள் அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பிவிட முடியும்.
மேலும், பிரின்ட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருப்பதால் நீங்கள் ஒரு Wi-Fi Printer-ஐ உங்கள் போனில் அமைத்திருந்தால் உடனே அதை பிரின்ட் (Print) எடுத்துக்கொள்ள முடியும்.
அதுதவிர நீங்கள் தங்களின் போனில் உள்ள PDF reader-லும் பார்த்துக்கொள்ள முடியும்.
தாங்கள் தயாரித்த ரசீதின் PDF கோப்புகள் தங்களுடைய போனில் அமைந்துள்ள File Manager மூலம் Local Files இருக்குமிடம் சென்றால் அங்கே நீங்கள் “QuickInvoice-Ekalai” என்னும் பெயர் கொண்ட ஒரு Folder-ஐ காணலாம்.
“QuickInvoice-Ekalai” Folder-க்குள் தாங்கள் தயாரித்த அனைத்து ரசீது கோப்புகளும் இருப்பதை நீங்கள் காணலாம். வேண்டுமானால் தாங்கள் அவற்றை “Backup” செய்து கொள்ளலாம்.
“View Old Receipt” என்னும் பட்டனை க்ளிக் செய்வதன் மூலம்
தாங்கள் தயார் செய்த கோப்புகள் அனைத்தையும் பெயர்வாரியாக இருப்பதை காணலாம்.
அவற்றில் கண் படத்தை க்ளிக் செய்வதன் மூலம் உடனே அவற்றின் சுருக்கமாக பார்க்க முடியும்.
நகல் (Copy) படத்தை க்ளிக் செய்வதன் மூலம் உடனே அவற்றின் தகவல்களை மீண்டும் பிரதி எடுத்து மறுபடியும் விரும்பிய ரசீதாக (From Quotation to Invoice or Bill) மாற்றியமைத்து தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு தயாரித்துக்கொள்ள முடியும்.
PDF கோப்பின் படத்தை க்ளிக் செய்வதன் மூலம் உடனே அவற்றின் தகவல்களை மீண்டும் தாங்கள் நிறுவியுள்ள PDF reader-ன் உதவியுடன் பார்வையிட்டுக் கொள்ளலாம்.
இவ்வளவு வசதிகளுடனும், இதற்கு மேலும் அதிக வசதிகளை கொண்ட இந்த “Quick Invoice” ஆறு மாத காலத்திற்கு வெறும் Rs.99 ரூபாய் மட்டுமே.